லோ தலைவரே, இந்திய புலனாய்வு அமைப்பு களுக்கு ’தண்ணி காட்டிவரும் மன்மத சாமியார் நித்யானந்தாவுக்கு மறுபடியும் சிக்கல் ஏற்பட்டிருக்கு.''”

"ஆமாம்பா, நித்தியால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது ஒரு அமைப்பாகத் திரண்டிருக்கிறார்களே?''”

nithy

"உண்மைதாங்க தலைவரே, போலிச் சாமியார் நித்தியானந்தாவின் வசியத்தில் மயங்கி, அவர் பின்னாலேயே சென்று விட்ட தங்கள் மகன்களையும், மகள்களையும் மீட்கவேண்டும் என்று போராடி வருகிற 21 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், "விக்டிம் ஆஃப் நித்யானந்தா ஆர்கனைஷேசன் கல்ட்' என்னும் அமைப்பை ஏற்படுத்தியிருக் கிறார்கள். இதன்மூலம் இந்தியப் பிரஜைகளான தங்கள் குழந்தைகள், கைலாசா என்ற பெயரில், வெளிநாடுகளில் நித்தியால் அடைத்து வைக்கப்பட்டி ருக்கும் இடத்தை மத்திய அரசு கண்டு பிடிக்க வேண்டும் என்றும், அவர்களை உடனடியாக மீட்டுத் தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருப்பதோடு, தலைமறைவுக் குற்றவாளியான நித்யானந்தா, தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் நேரலையில் வருவது, இந்திய இறையாண்மைக்கு சவால்விடும் செயலாகும். அதனால் அந்த நித்தி மீது மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தி, சட்டப் போராட்டத்தைத் தொடங்கியிருக் கிறார்கள். அதனால் நித்திக்கு விரைவில் ஆப்பு இருக்கிறது என்கிறது, ஆன்மீகத் தரப்பு.''”

"த.வெ.க. மாவட்டச் செயலாளர் கள் கூட்டத்தில் கூட நடிகர் விஜய் பங்கேற்கவில்லையே?''”

Advertisment

vijay

"கடந்த 16ஆம் தேதி பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில், அக்கட்சியின் மா.செ.க்கள் கூட்டம் நடந்தது. அதற்கு நடிகர் விஜய் வருவார் என்று அவரது கட்சியின் நிர் வாகிகள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் ஆப்செண்ட் ஆகிவிட்டார். இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருந்த விஜய், இப்போது தனது முடிவை மாற்றிக்கொண்டிருக்கிறாராம். அவர் அடுத்தடுத்த படங்களுக்கு கதை கேட்டு வருவதாகச் சொல்கிறார்கள். குறிப்பாக, பரபரப்பாக ஓடிய ஒரு படத்தின் "பார்ட் 2'வை டைரக்டர் நெல்சனை வைத்து எடுக்கலாம் என்று விஜய் கருதுகிறாராம். இதுதவிர இரண்டு புதுமுக இயக்குநர்களும் விஜய்யை சந்தித்துக் கதை சொல்லியிருக்கிறார்களாம். இப்படி படப்பணிகளில் தீவிரம் காட்டிவருவதால்தான் அவர் மா.செ.க்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லையாம்.''”

"பொள்ளாச்சி விவகாரத்தில் மறுவிசாரணை தேவை என்கிற குரல் எழுந்துவருகிறதே?''”

Advertisment

"பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், அ.தி.மு.க. புள்ளியான பொள்ளாச்சி ஜெயராமனின் மகன், கிருஷ்ணகுமார், பார் நாகராஜ் ஆகியோர் மட்டும் விடுபடவில்லை, ஜேம்ஸ் ராஜா என்கிற இன்னொரு கேரக்டரும் விடுபட்டிருக்கிறது என்கிறார்கள், அந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களில் கிருஷ்ணகுமார், அங்கே அ.தி.மு.க. நகரச் செயலாளராக இருந்தவராம். இவரும் ஜேம்ஸ் ராஜாவும் பொள்ளாச்சி ஜெயராமனின் வலது, இடது கைகளாக இருப்பவர்களாம். எனவே பொள்ளாச்சி வழக்கை மறு விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்றும், ஒட்டுமொத்த குற்றவாளிகளும் தண்டிக்கப்படவேண்டும் என்றும், அவர்கள் தரப்பிலிருந்து குரல் எழுந்துவருகிறது. தற்போது பொள்ளாச்சி ஜெயராமனின் மகனுக்கு திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. மணமகள் கர்நாடகாவைச் சேர்ந்தவராம். இந்த விவகாரத்தில் எடப்பாடி தலையிட விரும்பவில்லை என்கிறார்கள். ஏற்கெனவே பார் நாகராஜ் திருமணத்திற்கு எடப்பாடி சென்றதும், வேலுமணியும் நாகராஜும் தோளில் கைபோட்டுக்கொண்டு நிற்பதும் புகைப்பட ஆதாரங்களாக மாறி, எடப்பாடியைச் சங்கடப்படுத்துவதால், அவர் ஒதுங்கி நிற்க விரும்புகிறார் என்கிறார்கள்.''”

ss

"பா.ஜ.க. கூட்டணியில் இணைந்ததை எண்ணி, எடப்பாடி மனம் புழுங்குகிறார் என்கிறார்களே?''”

"எந்த நிலையிலும் ஓ.பி.எஸ்.சுடன் இணைந்து அரசியல் செய்வதில்லை என்கிற முடிவில் உறுதியாக இருப்பவர் எடப்பாடி. அதோடு, ஓ.பி.எஸ்.ஸை அரசியலில் செல்லாக்காசாக ஆக்கிவிடவேண்டும் என்றும் அவர் தொடர்ந்து காய் நகர்த்திவருகிறார். அதில் முதல்கட்டமாக, ஓ.பி.எஸ். அணிக்குத் தூண்களாக இருக்கும் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியை அவர் கையில் எடுத்திருக்கிறார். மனோஜும் எடப்பாடியின் அழைப்பை ஏற்று, அ.தி.மு.க.வுக்கு வர இசைந்திருக்கிறாராம். இப்படி ஒரு பக்கம் எடப்பாடி, ஓ.பி.எஸ்.சுக்கு எதிரான தனது அதிரடி மூவ்களைச் செய்துகொண்டிருக்கும் நிலையில், ஓ.பி.எஸ்., தங்களது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் நயினாரும், முன்னாள் மாநில நிர்வாகியும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி, எடப்பாடியைச் சீண்டி வருகிறார்களாம். ’எங்கள் மன உணர்வைப் புரிந்துகொள்ளாமல் இப்படி ஏட்டிக்குப் போட்டியாக நடந்துகொண்டால், எப்படி எங்களால் பா.ஜ.க. அணியில் உற்சாகமாக இயங்கமுடியும்?’ என்று கேட்கிறாராம் எடப்பாடி. இதனால் பா.ஜ.க. கூட்டணியில் நீடிப்பது கஷ்டம் என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள்.''”

"தி.மு.க. தலைமையைக் குறிவைத்து நடந்துவரும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் குறித்து, சம்பந்தப்பட்டவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ள வில்லை என்கிறார்களே?’''’

"இந்த ரெய்டு நடவடிக்கையை கடந்த ஒன்றரை மாதமாகவே தி.மு.க. எதிர்பார்த்தது என்கிறார்கள். காரணம், அந்த சமயம் டெல்லி சென்று வந்த முதல்வரின் மருமகனான சபரீசன், நம்மைக் குறிவைத்து ரெய்டு நடவடிக்கைகள் பாயப்போகிறது. அதில் என்ன கிடைக்கிறதோ அதற்கு ஏற்ப அடுத்தடுத்த நடவடிக்கைகளும் இருக்குமென்று தெரிகிறது என எச்சரிக்கை மணி அடித்தாராம். அவர் சொன்னது போலவே முதல்வரின் உறவினரான ஆகாஷ் பாஸ்கரனும், உதயநிதிக்கு நெருக்கமான ரத்தேஷும் டார்கெட் வைக்கப்பட்டு, ரெய்டு நடவடிக்கையில் குதித்திருக்கிறது அமலாக்கத்துறை. இவர்களில் ரத்தேஷும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் குடும்ப ரீதியாக நெருக்கமானவர் கள். ஆண்டுக்கு ஒருமுறை இவர்கள் குடும்பத்தினர் சேர்ந்து வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். தற்போது ரத்தேஷ் துபாய்க்கு சென்றுவிட்டாராம். ஏற்கெனவே தெரிந்ததுதான் என்பதால், இந்த ரெய்டு நடவடிக்கைகளால் தி.மு.க. தலைமை பெரிய அளவிற்கு அலட்டிக்கொள்ள வில்லையாம்.''”

"ஜனாதிபதிக்கு எதிராக மாநில முதல்வர்களை ஸ்டாலின் அணிதிரட்டு கிறாரே?''”

"தமிழக அரசின் சட்ட மசோதாக்கள் விசயத்தில், கவர்னர் ரவி கடைபிடித்துவந்த மெத்தனத்தையும், அடாவடியையும் கடந்த மாதம் கடுமையாகக் கண்டித்த உச்சநீதி மன்றம், கவர்னரின் அதிகாரம் குறித்துக் கேள்வி எழுப்பி, அதிரடித் தீர்ப்பையும் வழங்கியது. மேலும், மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் கால நிர்ணயத்தையும் செய்தது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, எரிச்சலான ஜனாதிபதி முர்மூ, உச்சநீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை அண்மையில் எழுப்பினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனத்தைத் தெரிவித்த தோடு, ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒன்று சேருமாறு, மேற்குவங்கம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப், இமாச்சல் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய 8 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். 8 மாநில முதல்வர்களும் ஸ்டாலினின் கடிதத்திற்கு பாசிட்டிவ் பதிலைத் தந்துள்ளார்களாம்.''”

"தி.மு.க.வில் மண்டலப் பொறுப் பாளர்கள் நியமனத்தில் வன்னிய சமூகத் துக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டி ருக்கிறதே?''”

"தி.மு.க.வின் தேர்தல் பணிகளை சுறுசுறுப்பாக்கும் வகையில் தமிழகத்தை 7 மண்டலங்களாகப் பிரித்து, அவற்றின் பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அர.சக்கரபாணி, எம்.பி.க்கள் கனிமொழி, ஆ,ராசா மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோரை நியமித்திருந்தார் ஸ்டாலின். இது குறித்து, கடந்த நம் நக்கீரன் இதழில் விரிவாகவே செய்தி வெளியாகி இருந்தது. இந்த மண்டலப் பொறுப்பாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மா.செ.க்கள், ஒ.செ.க்கள் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனைக் கூட்டங் களை தற்போது விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், நியமிக்கப்பட்ட மண்டலப் பொறுப்பாளர்களில் வன்னியர் சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் இல்லை என்கிற சர்ச்சை, தி.மு.க.வில் பலமாக எழுந்தது. இது ஸ்டாலினின் கவனத்துக்குப் போனதால், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கிய 8-ஆவது மண்டலத்துத்தை உருவாக்கி, அதற்கு வன்னிய சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை மண்டலப் பொறுப்பாளராக அவர் நியமித்திருக்கிறார்.''”

"தி.மு.க.வின் மண்டலப் பொறுப்பாளர்களின் ஆய்வுக் கூட்டங்கள் களைகட்டி வருகிறதே?''”

"ஆமாங்க தலைவரே, சென்னையில் ஆய்வுக் கூட்டங்களை நடத்திய ஆ.ராசா, முதல் கூட்டம் என்பதால் அதனை வெறும் அறிமுகக் கூட்டங்களாக நடத்தினார். ’அடுத்தடுத்த சந்திப்புகளில் முழுமையாக ஆய்வு நடத்துவேன். என்ன மாதிரி வியூகங்களை முன்னெடுக்கலாம் என்பது குறித்தும், உங்கள் மாவட்டங் களில் இதுவரை என்ன மாதிரியான தேர்தல் பணிகளைச் செய்திருக்கிறீர்கள் என்பது குறித்தும் நீங்கள் ஒரு தயாரிப்போடு வரவேண்டும்’ என்று ராசா, நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். இதற்கிடையே, பல மாவட்டங்களில் நடக்கும் ஆய்வுக் கூட்டங் களின்போது சலசலப்புகளும் உருவாகி வருகிறது. ஒருசில மாவட்ட பொறுப்பாளர்கள், உங்கள் மாவட்ட அமைப்பில் இருக்கும் நிறை குறைகளை சொல்லுங்கள் என நிர்வாகிகளிடம் கேட்கிறார்கள். ஆனால், நிர்வாகிகளோ, மாவட்ட செய லாளர்களை வைத்துக்கொண்டு நிறைகுறைகளைக் கேட்டால் எப்படி சொல்ல முடியும்? பிரச்சனைகளே அவர்களிடம் இருந்துதானே ஆரம்பிக்கிறது? என்று மண்டலப் பொறுப் பாளர்களிடம் தனியாகப் புலம்புகின்றனராம்.''”

"சில இடங்களில் தி.மு.க. நிர்வாகிகளுக் குள்ளேயே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறதே?''”

"சில இடங்களில் தி.மு.க. ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிரிக்க வேண்டியதை பிரிக்காமலும், பிரிக்கத் தேவை யில்லாததை பிரித்தும் வைத்திருப்பது அந்தந்த மாவட்ட நிர்வாகிகளிடம் மனக்கசப்புகளை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க.வில் காட்டாங்குளம் ஒன்றியத்தை வடக்கு, மத்தி, தெற்கு என 3 ஒன்றியங்களாக உடைத்திருக்கிறார்கள். இதை மூன்றாக உடைக்கத் தேவையில்லை. கே.பி.ராஜன் என்பவரை ஒ.செ.வாக ஆக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி உடைத்துள்ளனர். கே.பி.ராஜன், மத்திய ஒன்றியத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக லோக்கல் தி.மு.க.வினர் இப்போதே போர்க்கொடி தூக்கியுள்ளனர். குறிப்பாக, இந்த ஒன்றியத்தில் வன்னியர்களும், ஆதிதிராவிடர்களும் பெரும் பான்மையாக இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை ஒ.செ..வாக நியமிக்காததால் அந்த சமூக மக்களிடம் இந்த நியமனம் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.''”

"செங்கல்பட்டு மாவட்டத்துக்கு என்று தனியே ஒரு அமைப்பே இல்லை என்கிற குரல் தி.மு.க.வில் எதிரொலிக்கிறதே?''”

"தமிழக அரசு புதிதாக ஒரு மாவட்டத்தை உருவாக்கும்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சியின் மாவட்ட அமைப்பையும் அந்த மாவட்டத்தின் பெயரில் உருவாக்குவார்கள். ஆனால், 2019-ல் செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டும், இந்த மாவட்டத்துக்கு என்று தனி அமைப்பு ஏற்படுத்தப்படவே இல்லையாம். அங்கே மாவட்ட கழக அமைப்பை உருவாக்கி மா.செ. முதல் அனைத்து முக்கிய பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் தி.மு.க.வில் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஏனோ, கடந்த 6 ஆண்டு காலமாகவே இப்படிப்பட்ட அமைப்புகள் தி.மு.க.வில் இல்லை. அதனால் இந்தப் பகுதியே காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க.வாக செயல்படுகிறதாம். இது தொடர்பான ஏக்கம், செங்கல்பட்டு மாவட்ட உடன்பிறப்புகளிடம் தீயாகக் கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. மாவட்டப் பொறுப்பாளர்களின் ஆலோ சனைக் கூட்டம் நடக்கும்போது, இது தொடர் பான அதிருப்தி பகிரங்கமாகவே வெடிக்கும் என்கிறார்கள் அங்குள்ள தி.மு.க.வினர்.''”

"இ.பி.எஸ்.ஐ. குறிவைத்து முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. வீடுகள்ல ரெய்டு நடந்திருக்கே...''

ss

"ஆமாங்க தலைவரே... தமிழ்நாட்டில் ஆளும்கட்சி அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் மீது அ.தி.மு.க. கூட்டணி வகிக்கும் பா.ஜ.க. ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை, தீவிரமாக ரெய்டு நடத்தி நெருக்கடி தந்துவருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்குள் தி.மு.க.வை முடக்கவேண்டும் எனத் தீவிரம் காட்டுகிறது பா.ஜ.க.. அதற்காக தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய ஃபைல் களை இ..பி..எஸ். வழங்கியுள்ளார். அதனாலயே அ.தி.மு.க. முக்கியஸ்தர்களை முடக்க தி.மு.க.வும் களம்மிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் முதல்கட்டமாக, எம்.எல்.ஏ. சேவூர்.ராமச்சந்திரன், உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி வீட்டில் ரெய்டு நடத்தியுள்ளது. ஒருநாள் முன்னதாக தற்போது அ.ம.மு.க.வில் உள்ள முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரங்கசாமி அவரது மனைவி, மகன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்து ரெய்டு நடத்தினர். தொடர்ந்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் வீட்டில் ரெய்டு நடப்பதற் கான வாய்ப்புகள் உள்ளது என்கிறார்கள் ஆளும்கட்சி தரப்பில்.''

faf

"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். கோவை மாவட்டத்தில் இருந்து குற்றாலம் சென்று வேனில் திரும்பிய ஒரு குடும்பத்தினர், அப்படியே சாத்தான்குளம் அருகே இருந்த சாலையோரக் கிணற்றில் விழுந்துவிட்டார்கள். யாரும் மீட்க முன்வராத நிலையில், தகவல் அறிந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தீயணைப்புத்துறைக்குத் தகவல் கொடுத்து, அவர்களைக் களமிறக்கினார். அந்த விபத்தில் 5 பேர் இறந்துவிட்டார்கள். அவர்களில் மூவரின் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன்பின்னர், ஸ்கூபா டைவ் வீரர்கள் 5 பேரை ஸ்பாட்டுக்கு வரச்செய்திருக்கிறார் அனிதா. அவர்கள், ஆழத்தில் சிக்கிய உடல்களை மீட்டனர். இந்த மீட்புப்பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் 45 பேருக்கும், 5 ஸ்கூபா வீரர்களுக்கும் என மொத்தம் 50 பேருக்கும், தலா 10,000 ரூபாய் வீதம் 5 லட்சம் ரூபாயைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார் அனிதா. இப்படி அக்கறைகாட்டி அதிரடி நடவடிக்கை எடுத்த அமைச்சரை, அந்த சோகத்திலும் பாராட்டு கிறார்கள் ஏரியாவாசிகள்.''”

__________

இறுதிச் சுற்று!

கோவை மத்திய சிறைச்சாலையில் அதிகரிக்கும் இட நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், கோவை புறநகர் பகுதிக்கு சிறைச் சாலையை மாற்றும் முடிவை எடுத்திருந்தது தி.மு.க. அரசு. அதனை நிறைவேற்றுவதற்காக, முதல் கட்டமாக 211 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஆண்கள் சிறை, 111 சிறைக் காவலர் குடியிருப்புகள் கட்டுவதற்கு கோட்டையில் இருந்தபடி 19-ந்தேதி (திங்கள் கிழமை) காணொலி காட்சி வழியாக அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்வில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் கலந்துகொண்ட னர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து, தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பது ஆகியவை குறித்து அரசின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் ஸ்டாலின்.

-இளையர்